Saturday, 25 April 2015

என் காதல் சொல்ல தேவையில்லை..-7

Episode -7
--------------



ரயிலில் அமர்ந்து கொண்டாள் ராதிகா..
கருநீல வண்ண டாப்பும் அதில் வெள்ளை பூக்களுமாய் ..அந்த ஆடையை பாதி மறைத்தபடி அவளது வெள்ளை துப்பட்டா அங்கும் இங்குமாய் அசைந்து கொண்டிருந்தது..

ஒரு கருப்பு துப்பட்டாவால் தன் கருவண்டு கண்களை மட்டும் தவிர்த்து மொத்த முகத்தையும் மூடிக் கொண்டிருந்தாள் ..

"அக்கா..ஐ ஆம் சாரி ..நான் ஒருத்தர காதலிக்கிறேன்..அவர் வேறு மதத்தை சேர்ந்தவர்..என்னால் வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது ..நான் பைத்தியம் இல்லை..என்னை எந்த பேயும் பிடிக்கவுமில்லை..நான்  விரும்பி தான் அவரோடு போகிறேன் ..என்னை தேடாதீர்கள்..
தேங்க்ஸ் ..எல்லாத்துக்கும்..."

அக்கா என்னோட அந்த லெட்டெர படிச்சிட்டு என்ன நெனச்சிருப்பா??
ஒடுகாலின்னு நினைத்திருப்பாளோ ??அப்றோம் மாமா...கல்யாண செலவு மிச்சம்னு நெனச்சிருப்பார்..எப்டியோ என்ன தேட மாட்டாங்க..

ஒரு வழியா வந்துட்டோம் ஆனா......வாழ்க்கைய பாரு...வாழ்க்கைய பாரு அப்டிங்குறான் கண்ணன்..நான் அவன தானே வாழ்க்கையா நெனச்சேன்..அதனால தானே எத்தன முறை அவன் என்ன அசிங்கப்படுத்தினாலும் நான் பொருட்படுத்தல..இனிமே அவன் கிட்ட போய் என் காதலை சொல்ல தேவையில்லை..ஏன்னா நான் அவன எவ்ளோ லவ் பண்றேன்னு என்ன விட அவனுக்கு நல்லா தெரியும்..ஆனா ஒருவேளை அந்த பொண்ணு சொன்னது உண்மையா இருந்தா ..ஐயோ கடவுளே..."

இப்படி ஏதேதோ நினைத்தபடி திரும்பிய போது, ஒரு இளைஞன் அவளை உற்று பார்ப்பது புரிந்தது..

ஐந்தரை அடி இருக்கலாம்..ஒரு வட்டத்தை வரைந்து லேசாக தாடை பகுதியை மட்டும் தட்டையாக்கி, ஒரு முகம் வரைந்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் அவனும் இருந்தான்..கண்ணில் கண்ணாடி ..நீல நிற ஜீன்ஸ் ,செக்டு ரெட் ஷர்ட்..அழகன் தான்..

அவன் பார்வை அவள் மேல் பதிந்திருந்தது..சில ஆண்களுக்கோர் பழக்கம் உண்டு ..ஒரு பெண்ணின் முகத்தை  பார்ப்பதற்கு முன் அவள் பாதங்களை பார்ப்பது..

அவள் என்றோ காலில் வைத்த மருதாணி,நகம் வளர்ந்ததால் இப்போது பிறை வடிவில் இருந்தது..அவன் முதலில் பார்த்ததென்னவோ அவள் பாதங்களை தான்..இப்போது அவள் முகத்தை பார்க்கும் ஆவல் அவனுக்குள் மிகுந்திருந்தது..

"சீ..என்ன மனுஷன் இவன்..பொறுக்கி..பொம்பளைய பார்த்ததில்லையா?..என்ன சமூகம் இது?? பெண்ணை கண்டால் பேயும் இரங்குமாம்..பெண் உருவில் பேயே வந்தால் பேய்க்கும் இங்கே ஆபத்து தான்....பேயை விட கொடியவர்கள் வாழும் பூமி..

ஒரு பெண்ணை ஆறு பேர் சேர்ந்து..ஐயோ கடவுளே ..எனக்கு ஏன் இப்டி எல்லாம் தோணுது???நான் என் கண்ணனுக்கு மட்டும் தான் சொந்தம்..உயிரோடு இருந்தால் தானே கண்ட கண்ட நாயெல்லாம் நம்மை பார்க்கும் ..இல்லாம போயிட்டா..

ம்ம்...அதான் சரி..இப்டியே இல்லாம போயிடுவோம்..
என் கண்ணனுக்கு நான் வேண்டாம்...எனக்கு யாரும் வேண்டாம்..இந்த பூமியில் நான் வாழவும் வேண்டாம்.."

என்று உள்ளூர எண்ணியவள்..வெடுக்கென எழுந்தாள்..அந்த ரயில் பெட்டியின் கதவருகே சென்று நின்று கொண்டாள்..

"அம்மா...நான் உன்கிட்ட வரப்போறேன்.."என்று மனதுக்குள் முணுமுணுத்தபடி, குதிக்க முற்பட்டாள்..


"ஆ......."

(தொடரும்)

Sunday, 5 April 2015

என் காதல் சொல்ல தேவையில்லை-6


Episode-6
------------------


திருவானைக்காவல்..இந்த கோயில்ல தான் சிலந்தியும் யானையும் ஈசனை வணங்கி முக்தி பெற்றதாம்..தெரியுமா உனக்கு ?" என்ற கார்த்தியிடம் ,

அதெல்லாம் தெரியும்..ஆனா உங்க அம்மா நீ பிரெண்ட்சொட கிரௌண்ட் க்கு போயிருக்குறதா சொன்னாங்க..அப்றோம் எப்டி இங்க??" ஒரு மெல்லிய புன்னகையோடு பதில் கேள்வி கேட்டாள் தேவி..

"ஏன் ..நீங்கெல்லாம் தான் கோயிலுக்கு வரலாமா??நாங்க வந்தா தரிசனம் தர மாட்டேன்னு சொல்லி சாமி கண்ண மூடிக்குமா?"
என்றவன் அவள் முகத்தின் போக்கை கவனித்ததால் 

"உன்ன பார்க்க தான் வந்தேன்"என்ற மனதின் வார்த்தைகளை விழுங்கி விட்டு "வா..கால் வலிக்குது..அங்க உக்காந்துக்கலாம்.." என்றான்..

கோயில் வளாகத்தின் மண்டபம் ஒன்றில் இருவரும் அமர்ந்து கொண்டனர்..

அவள் பச்சை நிற பட்டு பாவாடையும் ,இளம் பச்சை நிற தாவணியுமாய் கொஞ்சம் அதிகம் அழகாக தெரிந்தாள் ...அவள் தனது  நீளமான ஜடையை  இடது தோளில் போட்டு,தன் கைகளால் தனது நெற்றி முடியை தள்ளியபடி,
அவனை ஒருமுறை பார்த்தாள்..பின்னர்,

"உனக்கொரு விஷயம் தெரியுமா??ஒரு முறை ஒரு பிராமணர் ஒருவர் தனக்கு உயர்ந்த ஞானம் கிடைக்கனும்னு ,இந்த திருவானைக்கா கோவிலில் ஒன்பது வாரம் ,இரவும் பகலும் ஓயாமல் அகிலண்டேஸ்வரியை நெனச்சு தவமாய் தவம் இருந்தாராம் .."

அவள் பேசுவதை கவனித்துக் கொண்டு தானிருந்தான்..ஆனால் அவள் எதை பற்றி பேசுகிறாள் என்பதை மட்டும் கவனிக்க மறந்து, அவள் விழிகளை பார்த்தபடி,

"சில டைம்ல நீ கூட அழகா தெரியுற டி " என்று மனதுக்குள் முணுமுணுத்தான்..

அவன் கவனிக்கவில்லையோ என்று நினைத்தவள்,
"டேய்..கேக்குறியா இல்லையா??" என்றாள்.

"ம்ம்,,சொல்லு சொல்லு.."

"அப்றோம் ஒரு நாள் கோயில்லையே தூங்கிட்டாராம் அந்த பிராமணர்..அப்போ அங்க வெள்ளை புடவை கட்டிட்டு வந்த ஒரு பெண், அவரை எழுப்பி அவர் வாயை திறக்க சொல்லி, அவரது வாயில் உமிழ்ந்தாளாம்..அதுக்கப்புறம் அந்த பிராமணர் கவிதை மழையா பொழிந்தாராம்..அதனால அவருக்கு காளமேக புலவர்னு பெயர் வந்துச்சாம்..வந்த பொண்ணு யார் தெரியுமா?" 

என்று அவள் முடிப்பதற்குள்,

"நீ எந்த மாதிரி பையன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற?"  என்றான் கார்த்தி..

"டேய் ...நான் என்ன சொல்லிட்டிருக்கேன் ..நீ என்ன கேக்குற?"

"இல்ல..காது கேட்காதவனா பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டா உன்ன கடைசி வரை கண் கலங்காம பார்த்துக்குவான்.."

"வாட் ?"

"கதை சொல்லியே கொல்றியே டி"

அவள் திரும்பிக் கொண்டாள்..கோபமாக எழுந்தவளின் ஜடையை பிடித்தான்..

"ஜடைய விடு டா ..இல்லன்னா ஸ்திரீ தோஷம் பீடிக்கும் .."

அம்மா தாயே சபிச்சுடாத..என்றபடி தன் பிடியை தளர்த்தினான்..

புன்னகைத்தபடி "ம்ம்,,அந்த பயம் இருக்கட்டும் .." என்றவள், மீண்டும் அவன் புறம் திரும்பி,

"ஏன்..கார்த்தி..எனக்கொரு டவுட்டு..விருப்பம் இல்லாத பெண்ணின், கூந்தலை தொட்டால் கூட கொடிய பாவங்களுக்கு உள்ளாவார்கள் அப்டின்னு நெறைய புராண கதைகள் சொல்லுது..ஆனா ஏன்..இப்பெல்லாம் .."சற்று நிதானித்தாள்...

சில நொடி அமைதிக்கு பின், "நேற்று கூட நியுஸ் பேப்பர்ல பார்த்தேன்....ஒரு சின்ன குழந்தைய...." என்று எதோ தொடங்கியவளை பேச விடாமல் ,

"பேப்பர்ல சயின்ஸ் ,பாலிடிக்ஸ், விளையாட்டு அது இது ன்னு எவ்ளோ நல்ல விஷயங்கள் வருது ...அதயெல்லாம் விட்டுட்டு உன்ன யாரு அத படிக்க சொன்னது??"என்றான் கார்த்தி..

"பூனை கண்ண மூடிகிட்டா உலகம் இருண்டு போயிடாது கார்த்தி...

"என் மனதின் காதல் புரிந்தும் புரியாதவள் போல் நடிக்கும் நீயும் அந்த பூனை மாதிரி தான்.."என்று மனதுக்குள் நினைத்தபடி.."ஆமா ..நீ மட்டும் என்னவாம்?? " என்று முநுமுனுத்தான்..
"வாட்"

"ம்ம்ம்..ஒண்ணுமில்ல.பேசாம கிரௌண்டுக்கெ போயிருக்கலாம்"என்று நெற்றியை சுழித்தபடி சொன்ன கார்த்திக்கிடம் 

"போக வேண்டியது தானே.." என்ற படி வேகமாக நடந்தாள் தேவி..

தொடரும்...