Episode -4
------------
"ஆ... அம்மாஆஆ ...." என்று அலறினாள் நந்தினி .
"என்னாச்சு டி " என்ற ராதாவிடம்
"ஒரு சிறு கல்லை தட்டினேன் .என் காலில் பெரிய அடி பட்டு விட்டது " என்றாள் அவள்.
ராதாவோ 'களுக்' என்று சிரித்து விட்டாள்.
" என் வலி உனக்கு சிரிப்பா இருக்கா?"
"இல்ல நந்து !! எங்க வீட்டு பக்கத்துல ஒருத்தர் குடி போதையில் வண்டி ஓட்டி ,சாலையோரமாய் நிறுத்திவைக்க பட்டிருந்த லாரியின் மீது மோதி இறந்து போனார். காதலும் ஒரு போதை என்பது உன்னை பார்க்கும் போது தான் தெரியுது . சிவனேன்னு ஒரு ஓரமா கிடந்த கல்லின் மீது நீயாய் போய் மோதிகிட்டியே அத நெனச்சு சிரிச்சேன்.."
"இவளுக்கு எப்போ அடி படும் ..எப்போ அறிவுரைகளை அள்ளி வீசலாம்னு காத்துட்டிருந்தியாக்கும்.??ஐயோ!!!ரத்தம் கூட வருதே.!!"
ராதாவோ ," சரி !சரி!சாரி !" என்று தன கையில் இருந்த கைக்குட்டையை எடுத்து, குடிப்பதற்காக பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை அதில் ஊற்றி ,அந்த கைக்குட்டையை ஈரப்படுத்தினாள்..பின்னர் அந்த ஈரத்துணியை நந்தினியின் ரத்தம் வழியும் கட்டை விரலில் கட்டி விட முயன்றாள்.
நந்தினி நின்று கொண்டிருந்ததால் அவளால் சரியாக கட்டி விட முடியவில்லை .அதனால் நந்தினியை சற்று தொலைவில் தெரிந்த கல் இருக்கையை நோக்கி மெதுவாக அழைத்து சென்றாள் ராதா.பின்னர் அவளை அந்த கல்லில் அமர செய்து , அவளது காலில் அந்த ஈர கைக்குட்டையை கட்டி விட்டாள்.
இந்நிலையில் இரண்டு கண்கள் இவர்களை தொடர்ந்து வருவதை இருவருமே கவனிக்கவில்லை..
'டப் டப் 'என்று யாரோ கை தட்டும் ஓசை கேட்டு இருவரும் திரும்பினர்..
அங்கே சற்று தொலைவில் கந்தல் ஆடையும், சடை பிடித்த தலையுமாய் ஒரு கிழவி நின்று கொண்டிருந்தாள். சற்று பயந்த நந்தினி ,"ராதா!!அதோ பாரேன்...அந்த வண்டிக்காரர் சொன்ன காத்தாயி இதுவா தான் இருக்கும்னு நெனக்கிறேன் " என்றாள் .
ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் ராதா.
இவர்களை நோக்கி நடந்து வந்த காத்தாயி ,'ஏய் பொண்ணுங்களா !!இந்த உச்சி வெயிலில் கல்லறை மேல் உட்கார்ந்து என்ன பண்ணிட்டிருக்கீங்க ?" என்றாள் சப்தமாக.
"அட இந்த பைத்தியக்கார கிழவி என்ன உளறுகிறாள் " என்று முணுமுணுத்த படி சற்று குனிந்து அந்த கல்லை பார்த்த ராதா அதிர்ச்சியுற்றாள்.
ஆம்!அது கல்லறை தான்.தோற்றம் மறைவு என்று பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் பாதி அழிந்த நிலையில் இருந்தன..
"ஹே! நந்து எழுந்திரு !!கிழவி சொல்றது சரி தான்..இது ஏதோ வில்லங்கம் போல் தெரியுது ..வா !!வேகமா நடந்துடலாம் "என்று அவளை இழுத்தபடி நடக்க தொடங்கினாள் ராதா..
ஓட்டமும் நடையுமாய் போகும் ராதாவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் , சற்று நொண்டியபடி பின் தொடர்ந்தாள் நந்தினி..
கொஞ்சம் தூரம் கடந்த பிறகு ,ஒரு முறை திரும்பி பார்த்த நந்தினி,
"ஹே ராதா !!அந்த கிழவி போயிடுச்சு !!இனியாவது கொஞ்சம் மெதுவா நடையேன் !!!" என்றாள்..
"நல்ல வேளை அந்த கிழவி போயிடுச்சு !!அது பைத்தியம்னு வண்டிக்காரர் சொன்னாரே நினைவிருக்கா !"என்றாள் ராதா.
"ம்ம்ம்.." என்று தலையசைத்தவள்
"இன்னும் எவ்ளோ தூரம் நடக்கணுமோ தெரியலியே " என்றாள் .
சற்று தொலைவில் ,
ஒரு புளிய மரத்து நிழலில் ,நடுத்தர வயதுள்ள மனிதன் ஒருவன் தலையில் முண்டாசும் கையில் பீடியுமாய் குத்த வைத்து அமர்ந்திருந்தான்..அவன் கையுள்ள பனியனும்,கட்டம் போட்ட அழுக்கு லுங்கியும் அணிந்திருந்தான்..
இருவரும் அந்த மனிதனை நோக்கி நடந்தனர்.
"அண்ணே !!தலைவெட்டான் பட்டிக்கு எப்டி போகணும் ?" என்றாள் ராதா.
அந்த மனிதன், இருவரையும் மேலும் கீழுமாய் ஒரு முறை பார்த்துக்கொண்டான்.பின்னர், தன் வலது கையில் பீடியை பிடித்து கொண்டு ,
"அங்க யாரை பார்க்கணும்?" என்றான்.
" அது உனக்கு தேவை இல்லை .வழியை கேட்டால் வழியை மட்டும் சொல் ." என்று முகத்தில் அறைவது போல் தான் ராதா பேசுவாள் என்று நந்தினிக்கு நன்றாக தெரியும்,.அதனால் அவள் அப்படி ஏதும் பேசுவதற்கு முன்னால் தானே பதில் சொல்லி விட வேண்டும் என்று முந்தி கொண்டாள்..
"மிட்டாய் கார சுப்பண்ணா வீட்டுக்கு போகணும் " என்ற நந்தினியை கோபமாய் ஒரு முறை பார்த்தாள் ராதா.அவள் பார்வை இவனுக்கெல்லாம் எதுக்கு பதில் சொல்ற என்பது போல் இருந்தது.
ராதா எப்போதும் இப்படி தான் .யாரையும் எளிதில் நம்ப மாட்டாள் .ஆனால் நந்தினியோ குழந்தை போல் எல்லோரையும் நம்பி விடுவாள்.
இந்த விஷயத்தில் அருணுக்கும் நந்தினிக்கும் இடையே கூட சின்ன சின்ன வாக்கு வாதங்கள் நடப்பதுண்டு..
"இப்டி குழந்தைதனமா எல்லாரையும் நம்ப கூடாது நந்து " என்பான் அவன்.
"நல்லவங்கள சந்தேக படுறது கூட தப்பு தாங்க " என்பாள் அவள்..
இப்படி தொடங்கும் வாக்குவாதம் நீண்டு கொண்டே போகும்.
"நந்து!!ஒரு மனிதனின் குணத்தை தெளிவா ஆராய்ந்து தெரிஞ்சுக்காம அவங்க மேல நம்பிக்கை வைப்பது புத்திசாலித்தனம் இல்லை நந்து!" என்பான் அவன் தன்னையுமறியாமல் பேச்சுக்கு இடையில் அவள் பெயரை அடிக்கடி உச்சரித்தபடி..
அவனுக்கு பதில் சொல்லும் விதமாக..
"ஆமாமா !!நீ உன் ஆராய்ச்சியை முடிக்கிறதுக்குள்ள அந்த மனுஷங்க ஆயுசு முடிஞ்சு போகும்.நம்பிக்கை வைப்பது என் கடமை..நான் நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் என்னை ஏமாற்றி விட்டால், நம்பியவளை ஏமாற்றிய பாவம் அவர்களை தானே சேரும் "என்பாள் அவள்.
"ம்ம்ம்..ஏமாந்த பாவம் உன்னை சேரும்..பாவமாம் புண்ணியமாம் ..இதோ பாரு நந்து, நீ இப்டியே இருந்தா எல்லோரும் உன்னை முட்டாள் ஆக்கி விடுவார்கள்.."
"நான் முட்டாள் ஆகாமல் பார்த்துக்க தான் நீ இருக்குறியே " என்பாள் நந்தினி, தன் பார்வையால் அவனை ஊடுருவியபடி..
தன் மனைவி எதை சொன்னாலும் ,கடைசியில் ஒரு துளி காதலையும் கலந்து விடுகிறாளே என்று உள்ளூர அவளை ரசித்ததனால் ,முகத்தில் பளிச்சிட்ட புன்னகையை மறைக்க முயன்றவாறு,
"சரி சரி !!ஒரு கப் காபி கிடைக்குமா ?" என்று பேச்சை மாற்றுவான் அருண்..
'ஆமா! என் வாயை அடைக்கணும்னா எதாச்சு வேலை குடுத்து கிச்சனுக்கு அனுப்பிட வேண்டியது." என்று முனுமுனுத்தபடி அடுக்களைக்குள் நுழைவாள் அவள்.
அந்த புளிய மரத்தடி மனிதனிடம் மிட்டாய் கார சுப்பண்ணா வீட்டுக்கு போகணும் என்று நந்தினி சொன்னதும்,
"ஒ! சுப்பண்ணா வீட்டுக்கா ??இந்த ஒத்தையடி பாதையில நேரா போயி சோத்து கை பக்கமா திரும்பினா தலைவெட்டான்பட்டி ன்னு ஒரு பெரிய போர்டு இருக்கும் .ஊருக்குள்ள போயி சுப்பண்ணா வீடு எதுன்னு கேட்டீங்கன்னா சொல்வாங்க .." என்றான்.
"நன்றிங்க !! என்றபடி இருவரும் மீண்டும் நடக்க தொடங்கினர்..
கொஞ்சம் தூரம் பேசாமல் நடந்த பின் ,
"நந்து!!பொதுவா காதலில் தோற்ற ஆண்கள் தானே பைத்தியம் ஆவாங்க..பெண்களுக்கு கூடவா பைத்தியம் பிடிக்கும் என்று ராதா சொன்ன போது ,காத்தாயி கிழவியை மனதில் வைத்துக் கொண்டு தான் இவள் இப்படி கேட்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள் நந்தினி ..
"ம்ம்...அதெல்லாம் காதலின் அளவை பொறுத்தது ராதா !!காதல்னா என்ன??அன்பின் இன்னொரு பரிமாணம் தானே !அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் தான்.காதலும் அப்படி தான் ..அது மிதமிஞ்சி போனால் மனநிலை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு..பொதுவாக ஆண்கள் வலியை மனதுக்குள் மறைத்து வைப்பவர்கள்..அவர்களால் வாய் விட்டு அழ முடியாது..அப்படி அழுவது ஆண்மைக்கு அழகும் கிடையாது..ஆனால் பெண்கள் அப்படி கிடையாது ..ஒரு சின்ன பிரச்சனையை என்றால் கூட ஐயோ அம்மா என்று ஒப்பாரி வைத்து வலியை தீர்த்து கொள்வார்கள் ..அவர்கள் இதயத்தில் இருக்கும் பாரமெல்லாம் கண்ணீரால் கரைந்து போய் விடும்..இந்த காத்தாயி மாதிரி சில பெண்கள் மட்டும் விதி விலக்கு."
"நீ சொல்றதும் சரி தான்..ஆனா அது காதலுக்கு பொருந்தாது..ஒரு ஆண் காதலில் தோற்று விட்டால் ,அவள் தாடி வளர்த்துக் கொள்ளலாம் ,தேவதாஸ் ஆகி டாஸ்மாக்கே கதி என்று கிடக்கலாம்,புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்ற போகிறேன் என்று தன்னை தானே அழித்துக்கொள்ளலாம் , பைத்தியம் போல் தெருவில் சுற்றலாம், 'சீ !!சீ! இந்த பொண்ணுங்களே இப்படி தான் மச்சி..எவளையும் நம்ப கூடாது ' என்ற அழுத்தமான முடிவோடு இருக்கலாம்,வஞ்சம் வைத்து பழி வாங்க துடிக்கலாம், இங்கே எல்லாத்துக்கும் ஆணுக்கு உரிமை உண்டு..ஆனால் பாவம் இந்த பெண்ண ஜென்மம்..காதலில் தோற்று விட்டால், வேறு எதை பற்றியும் யோசிக்காமல் இன்னொருத்தரை கல்யாணம் பண்ணி , அவர் குழந்தைக்கு அம்மா ஆகி விட வேண்டும்..ம்ம்.."
"வேறென்ன பண்ணனும் அப்டின்குற ??காதலில் தோற்ற பெண்கள் எல்லாம் பைத்தியம் ஆகி தெருவில் திரியனும் அப்டிங்குரியா??ஒரு வேளை அப்படி ஒரு நிலை வந்தால் என்ன ஆகும்னு யோசிச்சு பாத்தியா ??தாய்மை உணர்வோடு அன்னை ஒருத்தி ,தன் குழந்தைக்கு பாலூட்டுவதற்காக முந்தானையை விலக்கினால் கூட எங்கே என்ன தெரிகிறது என்று எட்டி பார்க்கும் ஈனப்பிறவிகள் வாழும் சமூஹம் ஆச்சே இது ..இவர்களுக்கு மத்தியில் மதியிழந்த பெண்கள் மானத்தோடு வாழ முடியுமா??இப்படி பைத்தியக்காரியாய் வேசியாய் தெருவில் திரிவதை விட, ஒருவனை மணந்து அவனுக்கு பத்தினியாய் வாழ்வது ஒன்றும் பாவமான செயல் இல்லை ராதா !!" என்று நந்தினி சொல்லி முடித்த போது ஆமோதிப்பது போல் "ம்ம்" என்றபடி தலையசைத்தாள் ராதா...
இருவரும் பேசி பேசி நடந்ததால் ,கடந்த தூரமும் நடந்த களைப்பும் தெரியவில்லை ..
சற்று தொலைவில் தலைவெட்டான்பட்டி என்ற போர்டு தெரிந்தது..
(தொடரும்..)

No comments:
Post a Comment