விடிகாலையில் கண்விழித்தால்
கடிகாரத்தை பார்த்து விட்டு
"அப்பாடா இன்னும் நேரமாகல "
என்று மனதுக்குள் எண்ணிய படி
மீண்டும் போர்வைக்குள்
ஒளிந்து கொள்ள பிடிக்கும்
வலது புறமாய் சரிந்து படுத்து
உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவின்
உறக்கம் கலையாமல்
அவள் முகத்தை
கண்களால் துழாவி
லேசாக புன்னகைக்க பிடிக்கும்
ரங்கநாதன் தெருவில்
நடைபாதை ஓரமாய்
பத்து ரூபாய்க்கு விற்கப்படும்
சிறிய குமிழி டப்பா ஒன்றை வாங்கி
சின்னஞ்சிறு குழந்தையாய் மாறி
சின்ன சின்ன குமிழிகளை
ஊதி விட பிடிக்கும்...
அங்கே பறப்பது
குமிழிகள் மட்டுமல்ல
நானும் தான்...
"சின்ன வயசுலேயே பார்பி பொம்ம
ரொம்ப பிடிக்கும் தெரியுமா ?
ஆனா அம்மா எனக்கு வாங்கியே தரல "
என்று நான் என்றோ சொன்ன
ஒற்றை வரியை
நினைவில் வைத்துக்கொண்டு
21 வயதில் அண்ணன்
எனக்கு பரிசாய் தந்த
பார்பி ரொம்ப ரொம்ப பிடிக்கும்
ஒரு ரூபாய்க்கு பலூன் வாங்கி
மூச்சை காற்றாக்கி
அதனுள்ளே நிரப்பி
கொஞ்சம் கடுகை
உள்ளே போட்டு
அது கிலு கிலு என
சிணுங்கும் சப்தத்தோடு
அந்த பலூனை
தட்டி தட்டி
விளையாட ரொம்ப பிடிக்கும்
சில சமயம்
நள்ளிரவு என்பதையும் மறந்து
சுட்டும் விழி சுடரே கண்ணம்மா
என்று புலம்பியபடி
பாரதியை படிக்க
ரொம்ப பிடிக்கும்..
காதல் கதைகள் படிக்க பிடிக்கும்
கவிதைகள் வாசிக்க ரொம்ப பிடிக்கும்
முக்கியமா ரமணி சந்திரனை படிக்க
ரொம்ப பிடிக்கும்..
என்ன தான் தாறுமாறாக வரைந்தாலும்
ஒரு முகத்தை வரைய தொடங்கி
வேறு முகத்தில் முடிந்தாலும்
ஒரு காகிதமும் பென்சிலும் கிடைத்தால்
படம் வரைய ரொம்ப பிடிக்கும்
எங்கெங்கோ படித்த
சிறு சிறு கதைகளை சேகரித்து
மனதுக்குள் தொகுத்து
சின்ன சின்ன குழந்தைகளை
சேர்த்துக்கொண்டு
"கதை சொல்லட்டுமா?"
என்று தொடங்கி
தொண்டை தண்ணீர்
வற்றும் வரை
இல்ல இல்ல
கேட்பவர் காதில்
ரத்தம் வரும் வரை
ஓயாமல் கதை சொல்ல
ரொம்ப ரொம்ப பிடிக்கும்
பிஞ்சு மாங்காய் பறித்து
அதில் கொஞ்சம்
உப்பும் மிளகும் சேர்த்து
"ஸ்.." என்ற சப்தத்துடன்
சப்பு கொட்டி சாப்பிட
ரொம்ப பிடிக்கும்
வறுத்த மீன் ரொம்ப பிடிக்கும்
கருவாட்டு குழம்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
என்ன தான்
வறுத்த மீனின் வாசனை
மூக்கை துளைத்து எடுத்தாலும்
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்
விரதம் என்ற பெயரில்
எனக்கு நானே
விதித்து கொள்ளும் கட்டுப்பாடு
ரொம்ப பிடிக்கும்
திரைப்படம் பார்ப்பதற்கு முன்னால்
"இந்த படம் சோகமா முடியாது இல்ல ?"
என்று கேட்டு
உறுதிபடுத்திய பிறகே
படம் பார்க்க பிடிக்கும்
And they lived happily thereafter
என்று முடியும்
fairytale
கதைகள் ரொம்ப பிடிக்கும்
நாளை என்பது உண்டா
அதில் நானும் இருப்பேனா
என்ற குழப்பம் அதிகம்
இருப்பதனால்
நாளை பற்றி பெரிதாய் யோசிக்காமல்
இன்றைய இந்த நொடியை
அழகாக்கி அதில் கிடைக்கும்
சின்ன சின்ன சந்தோஷங்களை
ரசிக்க ரொம்ப பிடிக்கும்...
போராட்டமே வாழ்க்கையாய் போன
ஒரு கட்டத்தில்
"மை இருட்டு மெல்ல மெல்ல
விடியலை நோக்கி நகரும் நித்யா
கவலைப்படாதே
இதுவும் கடந்து போகும்
என்று எனக்கு நானே
சொல்லிக்கொண்ட
இரண்டு வரிகளும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...
எனக்கு பிடித்த
இத்தனை விஷயங்களும்
எழுத்தில் அடங்காத
இன்னும் பல விஷயங்களும்
தேவையே இல்லை
என்னருகே நீ இருந்தால்.........
என்னங்க படிச்சு முடிச்சுடீன்களா??உங்க பொறுமைய நான் பாராட்டுறேன் ..
நேத்து தான் ஒரு தோழியோட வலைப்பதிவை படித்தேன்..3 பாரா எனக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் அப்டின்னு போட்ருந்தாங்க...சரி நமக்கு என்ன பிடிக்கும் அப்டின்னு உக்காந்து யோசிச்சு பாத்தேங்க ...சப்பா!!!!!லிஸ்டு ரொம்ப ரொம்ப நீளமா போகுது...இதுக்கு மேல டைப் பண்ண என்னால முடியாது சாமி..!!!!!!!!!.
இப்போ என்ன சொல்ல வர்ற ??அப்டின்னு தானே கேக்குறீங்க..!!!
யார்கிட்டயாச்சு உங்க காதலை சொல்லனும்னா இப்டி முயற்சி பண்ணி பாருங்க ...சொதப்பிட்டா என்ன கேக்க கூடாது...ஆமா சொல்லிபுட்டேன்...!!!!
பத்து ரூபாய்க்கு விற்கப்படும்
சிறிய குமிழி டப்பா ஒன்றை வாங்கி
சின்னஞ்சிறு குழந்தையாய் மாறி
சின்ன சின்ன குமிழிகளை
ஊதி விட பிடிக்கும்...
அங்கே பறப்பது
குமிழிகள் மட்டுமல்ல
நானும் தான்...
"சின்ன வயசுலேயே பார்பி பொம்ம
ரொம்ப பிடிக்கும் தெரியுமா ?
ஆனா அம்மா எனக்கு வாங்கியே தரல "
என்று நான் என்றோ சொன்ன
ஒற்றை வரியை
நினைவில் வைத்துக்கொண்டு
21 வயதில் அண்ணன்
எனக்கு பரிசாய் தந்த
பார்பி ரொம்ப ரொம்ப பிடிக்கும்
ஒரு ரூபாய்க்கு பலூன் வாங்கி
மூச்சை காற்றாக்கி
அதனுள்ளே நிரப்பி
கொஞ்சம் கடுகை
உள்ளே போட்டு
அது கிலு கிலு என
சிணுங்கும் சப்தத்தோடு
அந்த பலூனை
தட்டி தட்டி
விளையாட ரொம்ப பிடிக்கும்
சில சமயம்
நள்ளிரவு என்பதையும் மறந்து
சுட்டும் விழி சுடரே கண்ணம்மா
என்று புலம்பியபடி
பாரதியை படிக்க
ரொம்ப பிடிக்கும்..
காதல் கதைகள் படிக்க பிடிக்கும்
கவிதைகள் வாசிக்க ரொம்ப பிடிக்கும்
முக்கியமா ரமணி சந்திரனை படிக்க
ரொம்ப பிடிக்கும்..
என்ன தான் தாறுமாறாக வரைந்தாலும்
ஒரு முகத்தை வரைய தொடங்கி
வேறு முகத்தில் முடிந்தாலும்
ஒரு காகிதமும் பென்சிலும் கிடைத்தால்
படம் வரைய ரொம்ப பிடிக்கும்
எங்கெங்கோ படித்த
சிறு சிறு கதைகளை சேகரித்து
மனதுக்குள் தொகுத்து
சின்ன சின்ன குழந்தைகளை
சேர்த்துக்கொண்டு
"கதை சொல்லட்டுமா?"
என்று தொடங்கி
தொண்டை தண்ணீர்
வற்றும் வரை
இல்ல இல்ல
கேட்பவர் காதில்
ரத்தம் வரும் வரை
ஓயாமல் கதை சொல்ல
ரொம்ப ரொம்ப பிடிக்கும்
பிஞ்சு மாங்காய் பறித்து
அதில் கொஞ்சம்
உப்பும் மிளகும் சேர்த்து
"ஸ்.." என்ற சப்தத்துடன்
சப்பு கொட்டி சாப்பிட
ரொம்ப பிடிக்கும்
வறுத்த மீன் ரொம்ப பிடிக்கும்
கருவாட்டு குழம்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
என்ன தான்
வறுத்த மீனின் வாசனை
மூக்கை துளைத்து எடுத்தாலும்
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்
விரதம் என்ற பெயரில்
எனக்கு நானே
விதித்து கொள்ளும் கட்டுப்பாடு
ரொம்ப பிடிக்கும்
திரைப்படம் பார்ப்பதற்கு முன்னால்
"இந்த படம் சோகமா முடியாது இல்ல ?"
என்று கேட்டு
உறுதிபடுத்திய பிறகே
படம் பார்க்க பிடிக்கும்
And they lived happily thereafter
என்று முடியும்
fairytale
கதைகள் ரொம்ப பிடிக்கும்
நாளை என்பது உண்டா
அதில் நானும் இருப்பேனா
என்ற குழப்பம் அதிகம்
இருப்பதனால்
நாளை பற்றி பெரிதாய் யோசிக்காமல்
இன்றைய இந்த நொடியை
அழகாக்கி அதில் கிடைக்கும்
சின்ன சின்ன சந்தோஷங்களை
ரசிக்க ரொம்ப பிடிக்கும்...
போராட்டமே வாழ்க்கையாய் போன
ஒரு கட்டத்தில்
"மை இருட்டு மெல்ல மெல்ல
விடியலை நோக்கி நகரும் நித்யா
கவலைப்படாதே
இதுவும் கடந்து போகும்
என்று எனக்கு நானே
சொல்லிக்கொண்ட
இரண்டு வரிகளும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...
எனக்கு பிடித்த
இத்தனை விஷயங்களும்
எழுத்தில் அடங்காத
இன்னும் பல விஷயங்களும்
தேவையே இல்லை
என்னருகே நீ இருந்தால்.........
என்னங்க படிச்சு முடிச்சுடீன்களா??உங்க பொறுமைய நான் பாராட்டுறேன் ..
நேத்து தான் ஒரு தோழியோட வலைப்பதிவை படித்தேன்..3 பாரா எனக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் அப்டின்னு போட்ருந்தாங்க...சரி நமக்கு என்ன பிடிக்கும் அப்டின்னு உக்காந்து யோசிச்சு பாத்தேங்க ...சப்பா!!!!!லிஸ்டு ரொம்ப ரொம்ப நீளமா போகுது...இதுக்கு மேல டைப் பண்ண என்னால முடியாது சாமி..!!!!!!!!!.
இப்போ என்ன சொல்ல வர்ற ??அப்டின்னு தானே கேக்குறீங்க..!!!
யார்கிட்டயாச்சு உங்க காதலை சொல்லனும்னா இப்டி முயற்சி பண்ணி பாருங்க ...சொதப்பிட்டா என்ன கேக்க கூடாது...ஆமா சொல்லிபுட்டேன்...!!!!
No comments:
Post a Comment