Tuesday, 15 January 2013

Nameology


அன்றொருநாள் அம்மாவிடம்..

நான்: "ஏம்மா எனக்கு நித்யானு பேரு வச்சீங்க???உலகம் முழுக்க ஒரு கோடி நித்யாவாச்சு இருப்பாங்க ...எதாச்சு வித்யாசமா எனக்கு பேரு வச்சிருக்கலாம் இல்ல .." 


அம்மா :அந்த காலத்துல இன்டர்நெட் வசதி எல்லாம் இல்லையே வித்யாசமான பேரா தேட ...நீ கைகுழந்தையா இருக்கும் போது ஒரு நாள் ஒரு பேப்பர்ல எனக்கு பிடிச்ச 50 பேரு எழுதி வச்சிருந்தேன் ..அப்பா வந்ததும் அவர்கிட்ட காட்டி இதுல எந்த பேர உனக்கு வைக்கலாம்னு கேட்டேன்..உங்க அப்பாவுக்கு பிடிச்சது இந்த பேரு தான் அதையே வச்சுட்டோம் ..எனக்கு ஸ்ரீ அப்டின்னு முடியுற எல்லா பெரும் பிடிக்கும் ..அதனால நித்ய ஸ்ரீ அப்டின்னு உனக்கு பேரு வச்சோம்...அப்றோம் ஸ்கூலில் சேர்க்கும் போது அப்பா உன்கிட்ட கேட்டாங்க "நித்யா வேணுமா நித்ய ஸ்ரீ வேணுமான்னு..உன் வாயில ஸ்ரீ நுழையவே இல்ல..அதனால நீ நித்யா தான் வேணும் அப்டின்னு சொன்ன...அதான் நித்யா அப்டின்னு ஸ்கூலில் சேர்த்தோம்..

ஒரு பேருக்கு பின்னாடி இவ்ளோ பெரிய கதையா???முதலில் பிடிக்காமல் இருந்த என் பெயர் எனக்கு மெல்ல பிடிக்க தொடங்கியது...என் பெயரை மேலும் ஆராய தொடங்கினேன்...

நித்யா அப்டின்ன நிரந்தரமான அப்டின்னு அர்த்தமாம்..அது மட்டுமில்ல ஓம் நித்யாய நமஹ அப்டின்னு ஆதி பராசக்தியை துதிப்பார்கள்...அதனால் நித்யா அப்டிங்குறது அம்மனோட இன்னொரு பெயர்...
அது மட்டும் இல்லீங்க ...நித்யா அப்டின்குற பெயர்ல முத்தமிழும் இருக்கு...
மெல்லினம் -ங ,ஞ ,ண,ன,ம ,ந (நி )
வல்லினம் -க,ச ,ட,த ,ப ,ற (த்)
இடையினம் -ய,ர,ல ,வ ,ழ,ள (யா)

சாரி ,சாரி என் பேர பத்தி சொல்லி உங்க நேரத்த ரொம்ப வீணாக்கிட்டேன்...
வழக்கம் போல இப்போ என்ன சொல்ல வர்ற அப்டிங்குரீன்களா ??
1.பெயர் என்பது ஒரு மனிதனுக்கு கொடுக்க படும் முதல் அடையாளம்..முதல்ல உங்க பேர நீங்க நேசிக்கணும்...உங்களை நீங்களே நேசித்து கொள்வதற்கான முதல் வழி அது...
2.கோடி கணக்கான மனிதர்களுக்கு என் பெயர் இருக்கே அப்டின்னு கவலை படாதீங்க...உங்க திறமைகளை வளர்த்துகொங்க...உங்களோட பேருக்கு முன்னாடி எதாச்சு ஒரு சிறப்பு பெயர் தானா வந்து ஒட்டி கொள்ளும் ..ரஜினிகாந்த் அப்டின்குற சாதா பேருக்கு முன்னாடி சூப்பர் ஸ்டார் அப்டின்குற சிறப்பு பெயர் ஓட்டிகிட்ட மாதிரி...
என்னைக்காச்சு ஒரு நாள் நீங்களும் இந்த உலகத்துக்கு தனித்துவமானவரா தெரிய என்னோட வாழ்த்துக்கள்..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment