பிள்ளையார் கோயில் -ஒரு நாள் ஒரு முறையாவது போய் பிள்ளையாரிடம் வருகை பதிவு செய்து விட்டு வந்தால் தான் அன்றைய நாளே பூரணம் ஆனது போல் ஒரு உணர்வு.அன்றும் அப்படித்தான் பிள்ளையாரை காண சென்றிருந்தேன்.அங்கு 10 வயது சிறுமி ஒருத்தி அடி பிரதட்சிணம் செய்து இறைவனை வணங்க கண்டேன்.உள்ளூர லேசாக புன்னகைத்தேன்..என் புன்னகைக்கு காரணம் இல்லாமல் இல்லை..இந்த குழந்தை அடி பிரதட்சிணம் செய்து அப்படி என்ன வேண்டுகிறாள் என்ற ஒற்றை எண்ணம் என்னை அவள் வயதிற்கு இழுத்துச்சென்றது..அவள் வயதில் நான் வேண்டியது எல்லாம் நினைவுக்கு வந்தது.என்னையும் அறியாமல் சிரிப்பு மேலிட்டது..
செல்வ விநாயகர் கோயில் -பத்து வயது முதல் பள்ளி படிப்பு முடியும் வரை அவருக்கு ஒரு நாள் இரண்டு முறை அட்டண்டன்ஸ் போடுவது வழக்கம்..அப்போது வேண்டிக்கொண்டதேல்லாம் ஒரே விஷயம் தான்.ஒரே வசனத்தை கேட்டு கேட்டு பிள்ளையாருக்கே புளிச்சு போயிருக்கும்..என்ன வசனம் அப்டின்னு தானே கேக்குறீங்க.."பிள்ளையாரப்ப இன்னைக்கு உள்ள எல்லா டெஸ்ட்லயும் நான் புல் மார்க் வாங்கணும்..".ஒருவேளை அன்றைய வகுப்பு தேர்விற்கு நான் படிக்கவில்லை என்றால் "பிள்ளையாரப்பா இன்னைக்கு நான் டெஸ்டுக்கு படிக்கல .அதனால எப்டியாச்சு இங்கிலீஷ் மிஸ் மனச மாத்தி இன்னைக்கு டெஸ்ட் வைக்காம பண்ணிடு.."இது மட்டும் இல்லீங்க.."எனக்கு மீனாவ ரொம்ப பிடிக்கும்.ஆனா அவ மட்டும் வேற யாரையாச்சு தான் பெஸ்ட் ப்ரெண்டுன்னு சொல்றா ..அவள எப்டியாச்சு என் பிரெண்டு ஆக்கி வச்சிடு பிள்ளையாரப்பா "என்று பிள்ளையாரிடம் புலம்பியதும் உண்டு..
ஒரு அருகம்புல்லை வைத்து தேவலோகத்தையே வாங்க முடியும் என்று யாரோ சொன்ன வார்த்தையை நம்பி.தெருவோரம் கிடக்கும் புல்லை எல்லாம் பிடுங்கி (ஏதோ புல்லை போட்டேன் அது அருகம்புல் தானான்னு செரியா தெரியலீங்க..அருகம்புல் அப்டின்னு நெனச்சு தான் போட்டேன் )பூட்டியிருக்கும் செல்வ கணபதி கோயிலின் இரும்பு கம்பியின் ஊடே கைவிட்டு கையில் இருக்கும் (அருகம்)புல்லை பிள்ளையார் மேல் தூக்கி போட்டு விட்டு.."பிள்ளையாரப்பா இத வச்சு தேவ லோகத்தையே வாங்க முடியுமாமே..எனக்கு அதெல்லாம் வேண்டாம்..இன்னைக்கு எழுதுற எல்லா டெஸ்ட்லயும் நான் முழு மதிப்பெண்ணும் வாங்கணும்.."என்பேன்..
ஒருவேளை அந்த பிள்ளையார் சிலைக்கு பேசும் சக்தி மட்டும் இருந்திருந்தால் "இப்போ தாண்டி என்னை அய்யரு குளிப்பாட்டி அலங்காரம் எல்லாம் பண்ணி வச்சுட்டு போனாரு ..என் மேல ஏதேதோ புல்லை எல்லாம் போட்டு ஏண்டி என்னை அழுக்காக்குற ?எப்போவும் மார்க்கு மார்க்கு மார்க்கு ..இந்த வசனத்த நீ மாத்த போறியா இல்லையா என்று தன் தும்பிக்கையால் என்னை ஓங்கி அடித்திருப்பார் .
எல்லாம் சரி அந்த வசனத்த மாத்துனியா இல்லையா அப்டின்னு தானே கேக்குறீங்க ..ம்ம்ம் ..மாத்திநேங்க...ஒரே ஒரு சின்ன மாற்றம் தான்...பதினேழு வயது முதல் கல்லூரி படிப்பு முடியும் வரை "பிள்ளையாரப்பா இன்னைக்கு பரீட்சைல என்னை பாஸ் மட்டும் பண்ணி விட்டுரு பிள்ளையாரப்பா " அப்டின்னு வேண்டிட்டு இருந்தேங்க...இந்த வேண்டுதல்களை இப்போ நெனச்ச ரொம்ப ரொம்ப சிரிப்பா வருது..எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறேன்..மதிப்பெண் மதிப்பெண் என்று எண்களுக்கு பின்னால் ஓடியிருக்கிறேன்...அந்த ஓட்டத்தின் வேகத்தில் அறிவையும் திறமையையும் தேட மறந்து விட்டேன்...இப்போதும் பிள்ளையாரிடம் தவறாமல் அட்டெண்டன்ஸ் போடுவது உண்டு ..ஆனா அவர்கிட்ட போய் ஒன்னே ஒன்னு தான் சொல்வேன்.."பிள்ளையாரப்பா ஐ லவ் யு .ஐ ரியலி லவ் யு " அப்டின்னு.நமக்கு என்ன குடுக்கனும்னு கடவுளுக்கு நல்லாவே தெரியுங்க..நாம வேண்டனும்னு அவசியம் இல்லை..நம் அன்பை மட்டும் அவரிடம் சொன்னால் போதும்..மிச்சத்தை அவர் பார்த்துக்கொள்வார்...
அந்த சின்ன குழந்தையோட வேண்டுதலும் கண்டிப்பா மாற்குக்காக தான் இருக்கும் அப்டின்னு எனக்கு தெரியுங்க..
இந்த மொக்க கதைய எதுக்கு நித்யா சொல்ற அப்டிங்குரீன்களா..
1.உங்க குழந்தைகளை வளர்க்கும் பொது இப்டி பந்தய குதிரை மாதிரி மதிப்பெண் பின்னாடி ஓட விடாதீங்க..குழந்தைகள் படிக்கட்டும் ,நல்ல மதிப்பெண் எடுக்கட்டும் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை கூடவே அறிவை வளர்க்கட்டும் திறனை வளர்க்கட்டும் ,பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனதை வளர்க்கட்டும்,அறம் செய்யும் பண்பை வளர்க்கட்டும்..
நானும் பொறியியல் தான் படித்தேன்..மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை ..ச்விச்சு போட்ட லைட்டு எரியும் என்பதை தவிர சத்தியமா எனக்கு வேற எதுவுமே தெரியாதுங்க..சீ !!வெட்க கேடு..யாராவது கேட்டால் நானும் எஞ்சினியர் என்று சொல்லிகொள்கிறேன்..இந்த நிலை உங்கள் குழந்தைகளுக்கு வர வேண்டாம்...
அவர்கள் விரும்பும் படிப்பை படிக்க வையுங்கள் .பெரிய அரண்மனையில் கூலிககாரியாய் இருப்பதை விட ஒரு சின்ன குடிசையில் மகாராணியாய் வாழ்வதையே நான் பெருமையாய் கருதுகிறேன்..இருக்கும் இடத்தை விட அந்த இடத்தில் நீ என்னவாக இருக்கிறாய் என்பது தான் முக்கியம் .உங்கள் குழந்தைகள் மன்னர்கள் ஆகட்டும் மகாராணிகள் ஆகட்டும்..இந்த தேசத்தை ஆளட்டும்..எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்னும் முண்டாசு கவிஞனின் வார்த்தைகள் மெய் ஆகட்டும்..
வாழ்க பாரதம்!!!!!
No comments:
Post a Comment