"யாரு அவரு.."
"யாரோ வெளிநாட்டுக்காரர் ..இப்போ கெளம்பிடுவாங்க "
"நான் கண்டிப்பா பார்த்தாகனுமே " என்றபடி அந்த மனிதரிடம் சென்றேன்.அவர் கிளம்ப தயார் ஆகிக்கொண்டிருந்தார்..நான் அவரிடம் "உங்களுக்கு ஒரே ஒரு வாக்கியம் மட்டும் தமிழில் பேச சொல்லி கொடுக்கட்டுமா ?"என்றேன்..
"ஒ !!sure !!"என்றார்..
"வாட் இஸ் யுவர் நேம் ?" அப்டின்னு யாரவது உங்க கிட்ட கேட்ட நீங்க அதுக்கு " என் பேரு ஆப்ரஹாம் லிங்கன் " அப்டின்னு சொல்லணும் .."என்றேன்..
மனிதர் குழம்பிவிட்டார்..இவர் ஏன் குழம்புகிறார் என்று அவர் முகத்தை உற்று பார்த்தேன் ..அப்போது தான் கவனித்தேன் ..அவர் ஆப்ரஹாம் லிங்கன் இல்லை ..பராக் ஒபாமா ..
மீண்டும் அவரிடம் .."oh I am really sorry .I confused u with abraham lincoln..u are obama right?? "இப்போ கார்ரக்டா சொல்லி தர்றேன் ..
"என் பேரு நித்யா ..உங்க பேரு என்ன ??"
அதற்கு அந்த மனிதர் மிக அழகா சொன்னார்..
"என் பேரு ஒபாமா " என்று .
காலில் யாரோ அழுந்த மிதித்தது போல் இருந்தது..
ஆ என்ற சத்தத்துடன் கண் விழித்தேன்..அப்போது தான் புரிந்தது கண்டதெல்லாம் கனவு என்று..வலியை பொருட்படுத்தாமல் "அக்கா இப்போ தான் ஒபாமா கூட ஒரு முக்கியமான appointment முடிச்சுட்டு திரும்ப வர்றேன்.."என்றேன்
அந்த அக்காவோ "எழுந்ததும் என்னடி உளறுற ??"என்றாள் சற்று கடினமாக..
"நெஜமா அக்கா .இப்போ தான் அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கு தமிழ் கத்து குடுத்துட்டு வர்றேன்.."என்றேன்..
"ஐயோ ராம !!இந்த பொண்ணு அலும்பு தாங்க முடியலியே..."
என்று புலம்பினாள் அக்கா..
#கனவுல கூடவா நான் அமெரிக்க அதிபருக்கு தமிழ் கத்து குடுக்க கூடாது..அட போங்கப்பா!!!
No comments:
Post a Comment