இன்னைக்கு ராத்திரி நெறைய எரி நட்சத்திரங்களை பார்க்க முடியுமாம்..சோ மறக்காம மொட்டை மாடிக்கு வந்துடு நித்யா என்றாள் மலையாள தோழி ஒருத்தி.மேலும் ,அதை பார்க்கும் போது என்ன வேண்டிகிட்டாலும் அப்படியே நடக்குமாம்..என்றாள்...வேண்டுதலுக்கா பஞ்சம்.."அப்டின்னா கண்டிப்பா வர்றேன் சேச்சி என்றேன் நான்.இருந்தாலும் பொன்னியின் செல்வன் கதையில் "வானில் எரி நட்சத்திரங்கள் தென்படுவது ஏதோ கெட்ட சகுனம் " என்று படித்தது போல் ஒரு நினைவு..அதனால் வேறொரு பெண்ணிடம் சென்று, "அக்கா நான் இன்னைக்கு எரி நட்சத்திரம் பார்க்க போறேன் நீங்களும் வர்றீங்களா?"என்றேன்..
"எரிநட்சத்திரம் பாக்குறது நல்லது இல்ல அப்டின்னு சொல்வாங்க ..ஒருவேளை பார்த்தால் அருகில் இருக்கும் ஏதாவது பச்சை மரத்தை பார்க்க வேண்டும் " என்றாள் அந்த அக்கா.மீண்டும் வேறொரு பெண்ணிடம் அதே கேள்வியை கேட்டேன்..அவ என்ன சொன்னா தெரியுமா??"நித்யா எரிநட்சத்திரம் பார்த்த ஞாபக சக்தி போயிடுமாம்.அதனால அதை பார்த்த உடனே ஏதாவது பூவின் பெயரை நினைத்துக்கொள்ள வேண்டும் " என்றாள்..மீண்டும் அதே கேள்வியை நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.."நித்யா எரிநட்சத்திரம் பார்ப்பது நல்லது இல்ல ..அப்டி பார்த்தா துணியில் இருக்கும் நூலை பிய்த்து பிய்த்து எறிய வேண்டும் ..அப்போ தான் அந்த தோஷம் போகும் " என்றார்..
இவர்கள் சொன்ன பதிலை கேட்டு பயந்து போய் என்னை மாடிக்கு அழைத்த மலையாளி பெண்ணிடம் சென்று கேட்டேன்..அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா ??"ஐயோ அப்டி சொல்றவங்க எல்லாம் வட்டு ..(லூசு) .எங்கள் நாட்டில் எரிநட்சத்திரம் பார்ப்பது ரொம்ப நல்லதுன்னு சொல்வாங்க..இங்க சிவாஜி கணேசன் மாதிரி எங்க ஊருல உள்ள பெரிய நடிகர் ஒருத்தர் வீட்டு பக்கத்துல உள்ள ஒரு கோயில் புல்வெளியில் படுத்து கிடந்தாராம் ..அப்போ அவரு எரிநட்சத்திரம் பார்த்தாராம் .அதுக்கு பிறகு தான் அவரு பெரிய ஸ்டார் ஆனாராம்..நீ இன்னைக்கு ராத்திரி வர்றியா இல்லையா ?"என்றாள். .("நாலு பேரு நாலு விதமா பேசுறது அப்டின்னா இது தான் போலும்) .."ஸ்டார் ஆக வேண்டும் என்ற நப்பாசையில் நானும் வர்றேன் என்றேன்.."
அன்றிரவு ஏழு மணிக்கே மொட்டை மாடிக்கு போய் காவல் இருந்தோம்..எரினட்சத்திரத்தை தேடி வானம் முழுவதும் நோட்டமிட்டோம்..ம்ம்ம்..தெரிஞ்சுதுங்க..
"ஹே !!சேச்சி அங்க பாரு எரி நட்சத்திரம் என்று என் ஆள் காட்டி விரலை தூக்கி காட்டி சந்தோஷத்தில் குதித்தேன்..அட!!எரி நட்சத்திரம் பார்த்தால் ஏதாவது வேண்டிக்கொள்ள வேண்டுமே..அதனால் மனதில் உள்ள அத்தனை ஆசையையும் அதனிடம் சொன்னேன்..ஐயோ !!ஒரு வேளை மற்றவர்கள் சொன்னது போல் ஞாபக சக்தி குறைந்து விட்டால் என்ன செய்வது அதனால் அருகில் இருந்த பச்சை மரத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டேன்..ஐஐஒ !!பூ பெயரை நினைக்க மறந்துட்டேனே..நூலை பிய்த்து போடவும் மறந்துட்டேனே...!!"என்று ஏகப்பட்ட சிந்தனையில் மூழ்கி இருந்தேன்...அப்போது தான் அந்த மலையாளி பெண் என் முதுகில் ஒரு தட்டு தட்டி .."அடி பாவி அது எரி நட்சத்திரம் இல்ல டி ..விமானம்..அங்க பாரு இன்னும் நகர்ந்துகிட்டு இருக்கு..உங்க ஊருல நட்சத்திரம் பின்னாடி சிகப்பு நிறத்துல விளக்கு எரியுமா " என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள்...
அட !!என் வேண்டுதல் எல்லாம் வீணா போச்சே என்று நானும் என்னையே நொந்து கொண்டேன்...கடைசி வரை ஒரு எரி நட்சத்திரத்தையும் பார்க்கவே இல்லை..
என்ன கொடும சார் இது???