Saturday, 11 May 2013

நினைவெல்லாம் அருண் ..


(ஹலோ எப்டி இருக்கீங்க???கதை சொல்றது எனக்கு ரொம்ப பிடிக்குங்க..கதை படிக்க உங்களுக்கு பிடிக்குமா ??அப்டின்னா இதோ உங்களுக்காக ஒரு தொடர் கதை..உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்...)

Episode-1                                 

நினைவெல்லாம் அருண் 




"அருண் ப்ளீஸ் டா..ஓகே சொல்லேன் ..
எனக்காக ப்ளீஸ்..ப்ளீஸ்... " என்று ஓயாமல் நச்சரித்தாள் நந்தினி.
 அவள் கெஞ்சும் தோரணை பிடித்திருந்தாலும் ,சரி என்று சம்மதம் சொல்ல அவனுக்கோ மனம் வரவில்லை.

இருவருக்கும் திருமணமாகி ஓரிரு வருடங்கள் தான் இருக்கும் .இதுவரை மழலைச் செல்வம் இல்லையே என்ற ஒரு குறை தவிர அவர்களுக்கு வேறு எந்த குறையுமில்லை .அன்புக்கும் காதலுக்கும் துளி கூட பஞ்சமில்லை .இந்நிலையில் நந்தினி தன் தோழி சசி வீட்டுக்கு போக வேண்டும் என்றது அருணுக்கு ஏனோ பிடிக்கவில்லை...

"தலைவெட்டான்பட்டி ..கருமம் கருமம் ஊரு பேர பார்த்தியா ??இப்டி ஒரு ஊருக்கு தனியா போறேன் அப்டின்குற.."

"தனியாவா? இல்லையே என் கூட ராதாவும் வர்றா.."


"யாரு ஒல்லியா உயரமா இருக்குமே ..அந்த ஓட்டடைகுச்சியா ??அவ தான் உனக்கு பாதுகாப்பா??"

என் தோழியை அப்படி சொல்லாதீங்க அப்றோம் எனக்கு கோபம் எனும் பாவனையில் அருண் மீது ஒரு முறை தன் பார்வையை வீசி விட்டு ,

"அப்டின்னா நீங்க வாங்களேன் எனக்கு துணையா .." என்றாள் நந்தினி.

"எனக்கு வர நேரம் இல்லைன்னு உனக்கு நல்லாவே தெரியுமே.." என்றான் அவன்

"ம்ம்..தெரியும்..அதனால தான் ராதா கூட போகவான்னு கேக்குறேன்.."என்றாள் அவள்..


நந்தினி  நவ நாகரிக பெண் தான்..கணவனை வாடா போடா என்று சொல்லும் அளவிற்கு நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் பெண் தான்..ஆனால் தன் கணவனின் சம்மதம் இல்லாமல் அவள் எந்த செயலிலும் இறங்குவதில்லை.நினைத்ததை நடத்திக்கொள்வாள்..தன் கணவனை எதிர்த்து அல்ல .அவனை எப்படியாவது சம்மதிக்க வைத்து..இப்போதும் அதற்கான முயற்சியில் தான் இறங்கியிருந்தாள்.

"சசி எத்தனை முறை நம் வீட்டில் வந்து தங்கியிருக்கா.இதுவரை குறைந்தது 10 தடவையாவது நம்மை அவ வீட்டுக்கு கூப்பிட்டிருப்பா ..அழைத்து அழைத்து களைத்து போய் அன்னைக்கு என்ன சொன்னா தெரியுமா ???"என் வீடு கிராமத்துல இருக்கு.நான் ஏழை..அதனால தானே என் வீட்டுக்கு வரமாட்டேன்குற" அப்டின்னு கவலையோட கேட்டா.இப்போ நீயே சொல்லு இவ்ளோ தூரம் கூப்பிட்டும்  ,அவ வீட்டுக்கு நான் போகலேனா நல்ல இருக்குமா.."


தன் மனைவி சின்னஞ்சிறு குழந்தை போல , கன்னத்தில் ஆள் கட்டி விரலை அழுந்த பிடித்த படி  கெஞ்சலாய் தன்னை பார்த்த பார்வை அருணுக்கு பிடித்திருந்தது. ஆனாலும் அவனுள்ளே இனந்தெரியாத ஒரு வித பயம் இருந்ததாலோ என்னவோ "சரி" என்று மனதார சொல்ல அவனால் முடியவில்லை.

"ம்ம்..வேண்டாம்..போகதே..அப்டின்னு நான் சொன்னா எதாச்சு சொல்லி என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்வ..சோ உன் இஷ்டம் போல செய் ..நீ பத்திரமா போயிட்டு வந்தா அதுவே எனக்கு போதும் " என்றபடி டிவி ரிமோட்டை கையில் எடுத்தான்..

"ஹே !நெஜமாவா சொல்ற..ரொம்ப தேங்க்ஸ் டா .." என்றபடி அவன் கன்னத்தில் "பச் " என்று முத்தமிட்டாள்.மனதில் நினைப்பதை எல்லாம் சில நேரங்களில் வெறும் வார்த்தைகளால் சொல்ல முடிவதில்லை .அவள் மகிழ்ச்சி அங்கே முத்தமாய் வெளிப்பட்டது..


தன் மனைவி இப்படி செய்வாள் என்று அவனுக்கு நன்றாக தெரியும் .கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி என்ற கவிஞரின் வார்த்தைகள் இங்கே பலனளிக்கவில்லை..தன் மனைவியின் முத்தத்தை ரசிக்க மனமில்லாதவனாய் ,அவள் எச்சில் படிந்த தன் கன்னத்தை துடைத்து விட்டு  டிவியில் ஆழ்ந்தான்..


(தொடரும் ..)





No comments:

Post a Comment