காதல்... !!!ஹே !!!ஹே!!!அத பத்தி எழுதாத நித்யா!!...அது ஒரு கெட்ட
வார்த்தை ..சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்கும் கேவலமான விஷயம் காதல் என்று சொல்லும் உன்னத மனிதர்களுக்காக இந்த கட்டுரையை எழுதுகிறேன்...
அம்மா முதல் முதலில் வேலையில் சேர்ந்த போது அப்பா அம்மாவுக்கு ஒரு டிபன் பாக்ஸ் வாங்கி கொடுத்தார்..அதே டிபன் பாக்ஸில் தான் கிட்ட தட்ட 15 வருடங்கள் அலுவலகத்திற்கு உணவு கொண்டு போனாள் அம்மா..அந்த டிபன் பாக்ஸ் ஒரு நாள் தொலைந்து போன போது ,நான்கைந்து நாட்கள் சோகம் கப்பிய முகத்தோடு காணப்பட்டாள் அம்மா..சாதாரண பாக்ஸ் தானே ..இதுக்கு போயி ஏம்மா இவ்ளோ பீல் பண்றீங்க என்ற போது , "போடி" அதெல்லாம் உனக்கு புரியாது என்றாள்..
"ஏம்மா ..அப்பாவ லவ் பண்றீங்க இல்ல ??" என்ற போது "இப்ப உள்ள பிள்ளைகளுக்கு அம்மா கிட்ட எப்டி பேசணும்னு கூட வெவஸ்த இல்ல..அதிக பிரசங்கி தனமா பேசாதே " என்று கடிந்து கொண்டாள்..பாவம்..அவளுக்குள் இருக்கும் அந்த மெல்லிய கவித்துவமான உணர்வு தான் காதல் என்று அவளுக்கே தெரியவில்லை ..
அன்றொரு நாள் பெரியப்பாவிடம், " ஏன் பெரியப்பா??நீங்க உங்க தொப்பைக்கு மேல வேட்டி கட்டுறதால தானே அடிக்கடி அவிழ்ந்து போகுது..வேட்டி கீழ விழாம இருக்க ஒரு பெல்ட் கட்டினா என்ன ?" என்றேன்..அதற்கு பெரியப்பா ," நானும் அப்டி தான் நெனச்சேன் பிள்ளே !!!ஆனா அது என் பொஞ்சாதிக்கு பிடிக்காது!!!" என்று சொல்லி சிரித்தார்..அவருக்கு வயது 70 க்கு மேல் இருக்கும் ..அவரிடம் போயி "காதல் " என்ற வார்த்தையை சொல்லி விட்டால் ஏதோ சமூக விரோத செயலில் ஈடுபட்டவரை பார்ப்பது போல் தான் பார்ப்பார் ..பாவம் !!அவருக்கு தெரியவில்லை..அவருக்குள் இருக்கும் அந்த அழகான உணர்வுக்கு சுத்தமான தமிழ் பெயர் தான் 'காதல் 'என்று ..
திருமணமான ஒரு அக்காவிடம் கேட்டேன்.." ஏன் கா !!காதலர் தினம் கொண்டாடலியா??அண்ணன் கிட்ட " ஐ லவ் யு " சொல்லலியா?" என்று..அதற்கு அந்த அக்கா சொன்னாள்..
" அட போ மா !!நாங்க கணவன் மனைவி..காதலர்கள் இல்லையே" என்று..
"அங்கீகரிக்கப்பட்ட காதலர்கள் அப்டின்னு வச்சுக்கலாமே.." என்றேன்.
" சீ சீ ! அதெல்லாம் இல்ல..ஜஸ்ட் husband wife அவ்ளோ தான்.." என்றாள்
"அப்டின்னா ...உங்களுக்கு அவர பிடிக்காது ..அப்டி தானே..!"
" ஏய் !!அவர ரொம்ப பிடிக்கும்!!உலகத்துல எல்லாத்தையும் விட அவர தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்..." என்றவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது..பாவம்!! அவளுக்கும் தெரியவில்லை ..அவள் முகத்தில் படரும் வெட்கத்திற்கு காரணம் காதல் என்று..
இங்கே உண்மையாக காதலிக்கும் பலருக்கு தெரிவதில்லை தாங்கள் காதலர்கள் என்று..ஆனால் சாட்டிங்கும் டேட்டிங்கும் செய்து காதலை வெறும் பாலின கவர்ச்சியாய் மட்டும் பாவிக்கும் பலர் சொல்லி கொள்கிறார்கள் ..தாங்கள் காதலர்கள் என்று..
காதலை மதிப்போம் !!!தெய்வீகமாய் பாவிப்போம்!!!
ஆதலால் காதல் செய்வீர்...
No comments:
Post a Comment