Tuesday, 25 September 2012

கடவுளுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கடவுளுக்கு 
வாழ்க்கை ஒரு வட்டம் என்றீர்கள் 
இவ்வளவு குறுகிய வட்டத்தை 
நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை 
அழுக்காறு அங்கே உண்டு என்றீர்கள் 
இவ்வளவு அழுக்கை
நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை 
அம்மா என்று ஒருத்தி 
அங்கே இருப்பாள் என்றீர்கள் 
அப்படி யாரும் இங்கே தென்படவில்லை 
ஆயிரம் கேள்விகளோடும் குழப்பங்களோடும்
இருக்கிறேன்
இப்படிக்கு
குப்பைதொட்டி குழந்தை !!!

No comments:

Post a Comment