Tuesday, 25 September 2012

நினைவலைகள்


சின்ன வயசுல தொலஞ்சு போன நினைவு இருக்கா என்று அம்மா கேட்டாள்..மறக்க முடியுமா? ..10 வயது சிறுமி..திருவேற்காடு கோயில்..ஆங்காங்கே அழகான சிலைகள்...அதில் மிக அழகான சிற்பம் ஓன்று..இல்லை இல்லை வெறும் சிலை இல்லை அது..அந்த ஆதி சக்தியே தான்.அவ்வளவு அழகு..வண்ண மலர்களால் அன்னைக்கு ஆரமிட்டு பார்த்திருப்போமே!!இங்கே அப்படி இல்லை..நூறு ரூபாய் நோட்டுகள் தான் அன்னை கழுத்தை அலங்கரித்திருந்தது..அங்கே அப்படியே நின்று 
விட்டேன்.. மெய்சிலிர்க்க அவளை ரசித்ததாலோ என்னவோ நான் நிற்கும் நிலை மறந்தேன்..இடம் மறந்தேன் ...என் எண்ணமெல்லாம் அவளே இருந்தாள்..சில வினாடிகள் தொலைந்திருந்த நான் சுய நினைவு பெற்றேன்.அருகில் அம்மா இல்லை ,தம்பியும் இல்லை.அப்போது தான் நிஜத்தில் தொலைந்து போனதை உணர்ந்தேன்..அம்மா என்று அலறியபடியே கோயில் முழுவதும் சுற்றினேன் ..ஒரு ரூபாய் கொடுத்ததற்காக என் தலையில் தும்பிக்கை வைத்து ஆசிர்வதித்த யானை, "என்ன தைரியம் பாரேன் ?" என்று என் கன்னம் கிள்ளி முத்தமிட்ட மடிசார் மாமி எல்லோருமே நான் தலை தெறிக்க ஓடுவதை வேடிக்கை பார்த்தனர்.கற்பனையோ எட்டாத தூரத்திற்கு ஓடிக்கொண்டிருந்தது .அம்மா கிடைக்காவிட்டால் என்ன செய்வேன்? கையில் காசும் இல்லையே.. வீட்டுக்கு போக வழியும் தெரியாதே..யாராவது என்னை கடத்தி கண்களை பறித்து ம்ஹூம் ..இல்லை இல்லை அம்மா!! என்று அலறியபடி கோயிலை ஓரிரு முறை சுற்றி வந்தேன். இரண்டாவது முறையாக கோயில் முழுவதும் சுற்றி முடித்த போது எதிரில் அம்மா ஒரு கையில் விபூதியை தட்டியபடி நின்று கொண்டிருந்தாள்..அம்மா என்று கூப்பாடு போட்ட படி ஓடி போய் அவளை கட்டி தழுவி "என்ன விட்டுட்டு எங்கம்மா போனீங்க?"என்று தேம்பியபடியே கீழே விழுந்தேன்.."குழந்தைக்கு தண்ணி குடுங்க"என்று ஒரு குரல் மட்டும் கேட்டது. கண் விழித்த போது அம்மா மடியில் தலை வைத்திருந்தேன்..அம்மா கண்களில் கண்ணீர்.. பாவம் நான் தொலைந்து போனது தெரியாமல் எதோ சிறு ஓட்டை வழியாய் கருவறையில் இருக்கும் கருமாரியை தரிசித்துக்கொண்டிருந்தாலாம்..."வானு சொல்லிட்டு தானே அங்க போனேன்..என் பின்னாடியே வராம நீ எங்க போன??"என்றாள்.."சாமி அழகா இருந்துச்சு அதான் அங்கயே..என்று சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் அழுகையை தொடங்கி விட்டேன் .."சரி சரி ஒண்ணுமில்ல அதான் அம்மா வந்துட்டேனே "என்று என்னை மார்போடு அணைத்து தன் முந்தானையால் என் கண்ணீர் துடைத்தாள்..இந்த கூத்தை எல்லாம் ஊரே நின்று வேடிக்கை பார்த்தது...

இப்போ நெனச்சா சிரிப்பா தான் இருக்கு ..நீங்க யாராச்சு எப்போவாச்சு தொலஞ்சு போன அனுபவம் உண்டா ?விரும்பினால் பகிர்ந்து கொள்ளவும் ..



No comments:

Post a Comment