என் பெயர் ஜீவா .அன்று பேருந்து தினம் கொண்டாட தயாராகிக்கொண்டிருந்தேன். சில நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த நேரம் அது .அப்போது ஒரு பெண்ணின் கொலுசொலி கேட்டு சற்று திரும்பினேன் .சட்டென்று ஒரு அதிர்ச்சி .என் இருக்கைக்கு அருகில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் .என்ன நினைத்தாளோ தெரியாது, என் அருகிலேயே அமர்ந்து விட்டாள்.அமர்ந்தவள் கொஞ்சம் நேரமாய் தன் ஓர கண்ணால் என்னையே பார்த்து கொண்டிருந்தாள் .தன் கைகளால் என்னை மெல்ல தொட்டாள்.என் உடல் சற்று கூசியது.நான் மெதுவாய் விலக நினைத்த போது அவள் என்னை தன் கைகளால் அணைத்து கொண்டாள் .தன் மார்போடு சேர்த்து கொண்டாள். என்னை அப்படியே கட்டி பிடித்து ,"உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா ?உன்னை கையில் பற்றிக்கொண்டு வீட்டிற்கு போவேன் , உன்னோடு விளையாடுவேன், கதை பேசுவேன் ,முத்தமிடுவேன் .என் உள்ள உவப்பினை உன்னோடு பகிர்ந்து கொள்வேன் .உன்னை உளமார நேசிக்கிறேன் " என்று என்னென்னவோ சொன்னாள்.எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை .வெறும் காற்றடைத்த பலூனை எவளாவது காதலிப்பாளா என்று உள்ளுக்குள் யோசித்துக்கொண்டேன்.
பேருந்து புறப்பட்டது .அவள் என்னை பார்த்து பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் .சட்டென்று ஒரு அதிர்ச்சி.என் நண்பர்கள் சிலரை அவளது நண்பர்கள் குத்தி கொன்றனர். நான் அவர்கள் கண்ணில் படாத படி அவள் என்னை மறைத்துக்கொண்டாள் .நானும் உயிருக்கு பயந்து ஒளிந்திருந்தேன் .எப்படியோ அவளின் தோழி ,"ஹே சந்தியா !நான் அந்த பலூனை பார்த்துட்டேன் என்று என்னை சட்டென்று பிடுங்கி கொண்டாள் .அப்போது தான் தெரியும் அவள் பெயர் சந்தியா என்று."ப்ளீஸ் டி ,எனக்கு அது வேணும் .அதை ஒன்னும் பண்ணிடாத "என்று என்னை விட்டுவிடும் படி சந்தியா தன் தோழியிடம் கெஞ்சினாள்.அஞ்சியபடி இருந்தாலும் அவள் கெஞ்சலை கொஞ்சமாய் ரசித்துக்கொண்டிருந்தேன்.
"இந்தா பிடி ,இந்தா பிடி " என்ற படி என்னை வைத்து விளையாட்டு காட்டினாள் அவாது தோழி.அழாத குறையாய் "கொடு டி என்கிட்டே " என்று மீண்டும் கெஞ்சினாள் சந்தியா.விட்டா அழுதுடுவ போல இருக்கு ,இந்த பிடிச்சு தொல" என்று என்னை சந்தியாவின் கைகளில் ஒப்படைத்தாள் அவளது தோழி .என்னை தன் கைகளால் பற்றிய பின் தான் பெருமூச்சு விட்டாள் சந்தியா.ஏதோ புதையல் கிடைத்த சந்தோசம் அவள் கண்களில் தெரிந்தது எனக்கு .அவளது விழிகள் அசையாமல் சில நொடிகள் சென்றது. அவள் என்னை எவ்வளவு நேசிக்கிறாள் என்பது கொஞ்சம் புரிந்தது .ஆனால் உறுதி செய்ய அது போதவில்லை .சற்றும் எதிர்பாராமல் திடீரென பெரும் காற்று வீசியது .ஜன்னலோரம் அமர்ந்திருந்த அவளது மெல்லிய பிடியிலிருந்து காற்று என்னும் சதிகாரன் என்னை பிடித்து இழுத்துச்சென்றான் .நான் இழுத்து செல்லப்பட்ட திசை நோக்கி அவள் தலை திரும்பியது.அவள் விழிகளின் ஓரமாய் ஒரு துளி நீர் கசிந்து அவள் அழகிய கன்னங்களில் உருண்டோடி கீழே விழுந்ததை என் கண்களால் கண்டேன் .அப்போது உறுதி செய்து கொண்டேன் .அவள் காதலின் புனிதத்தை புரிந்து கொண்டேன்.
அதுவரை என்னை அவள் காதலித்தாள்.அந்த நொடி முதல் அவளை நான் காதலிக்கிறேன் .எங்களை பிரித்த சதிகார காற்றே எனக்காக ஒரே ஒரு உதவி செய் .நீ போகும் திசையில் அவளை கண்டால் என் காதலை அவளிடம் சொல்லி விடு.
காதலுடன்
ஜீவா
No comments:
Post a Comment