Thursday 15 November 2012

ராசியில்லாதவள்

 "ம்ம்ம்ம் நீ பிறக்குறதுக்கு முன்னாடி நமக்கு எவ்ளோ சொத்து இருந்துச்சு தெரியுமா??நீ ஒரு ராசியில்லாதவள் .எல்லாம் உன்னோட ராசியால இல்லாம போச்சு " என்று எப்போதும் பாடும் பாட்டை தொடங்கினாள் அம்மா ."ஆமாமா ..நான் பிறக்க்லன்னா நம்ம குடும்பம் தான் அம்பானி குடும்பம்  மாதிரி பெரிய பணக்கார குடும்பமா இருந்திருக்கும்..போ மா நீ வேற " என்று சலித்த படியே பதில் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர முயற்சி செய்தாள் ராதிகா ." "அம்மா, அப்பாவோட சோப்பு கம்பெனி பத்தி சொல்ல மறந்துட்டியே என்று எடுத்து கொடுத்தான் ராமு,ராதிகாவின் தம்பி ."ம்ம்ம்...அத ஏன்டா கேக்குற? அப்பா ஆசை ஆசையா ஒரு சோப்ப்பு கம்பெனி வச்சாரு .அத தொடங்கி வைக்க தன்னோட பொண்ணு தான் விளக்கேற்றி வைக்கனும்னு சொன்னாரு.அதுக்காக சின்ன குழந்தையா இருந்த உங்க அக்காவோட கைய புடிச்சு விளக்கும் ஏதின்னாரு .."என்றாள்  அம்மா ..அப்றோம் என்ன ம்மா ஆச்சு ?? என்றான் ராமு .."என்ன ஆச்சா?சோப்பு கம்பெனி ஆத்தோட போச்சு."என்றாள் அம்மா."ஏன்டா இந்த கதை உனக்கு தெரியாதா?இத தான் அம்மா நூறு தடவயச்சு சொல்லிருப்பங்களே..நான் விளக்கேற்றாமல் இருந்திருந்தா அப்பா என்னவோ டாட்டா கம்பெனி முதலாளி ஆயிருப்பாருன்குற மாதிரியே பேசுங்க..நான் கெளம்புறேன் எனக்கு காலேசுக்கு நேரமாச்சு என்றபடியே வேகமாய் நடை கட்டினாள் ராதிகா .


என்ன தான் நக்கலாக பேசி பதிலடி  கொடுத்தாலும்,தான் ஒரு ராசியில்லாதவள் என்று அவள் ஆழ் மனதில் எங்கோ பதிந்து போயிற்று.

தான் செல்லும் வண்டி  பஞ்சர் ஆகிவிட்டால் "நான் ஒரு ராசியில்லாதவள்.நான் ஏறினா எந்த வண்டியா இருந்தாலும் இப்டி எல்லாம் தான் ஆகும் என்று தன்னை தானே நொந்து கொள்வாள் ராதிகா.குடை கொண்டு போகாத போது மழை வந்து விட்டால் "நான் குடை கொண்டு வரல இல்ல அதனால தான் மழை பெய்யுது..நான் ஒரு ராசியில்லாதவள் என்று தனக்குள் புலம்புவாள்.


அன்று அம்மா வெளியூர் சென்றிருந்தாள்.வீட்டிலோ யாரும் இல்லை.கல்லூரிக்கு நேரம் ஆனதால் பக்கத்து வீட்டில் இட்லி கடை நடத்தும்  பாட்டியிடம் ஒரு பொட்டலம் இட்லி வாங்கி கொண்டாள்.."பாட்டி
அம்மா வந்தா இந்த சாவிய அவங்க கிட்ட கொடுத்துடுங்க என்ற படி சாவியை நீட்டினாள். பாட்டியும் சாவியை வாங்கி வைத்து கொண்டாள்.
அன்று மாலை ஆறு மணிக்கு கல்லூரி முடிந்து வீடு வரும் வழியில்  இட்லி கடைக்குள் நுழைந்து,"பாட்டி அம்மா வந்தாங்களா? "என்றாள்."இல்ல கண்ணு.இந்தா சாவிய புடி " என்று சாவியை நீட்டினாள் பாட்டி .ராதிகாவும் சாவியை வாங்கி கொண்டாள்."நாளைக்கும் இங்கயே வந்து இட்லி வாங்கிக்குரியா கண்ணு ?" என்றாள் பாட்டி.."அம்மா இன்னைக்கு ராத்திரிக்குள்ள வரலன்னா நாளைக்கும் வாங்கிக்குறேன் பாட்டி "என்ற படியே நடக்க தொடங்கினாள் ராதிகா ..
அவள் தலை திரும்பியதும் பாட்டி அருகில் இருந்த பெரியவரிடம் பேச தொடங்கினாள்." அதோ போறாளே அந்த ராதிகா பொண்ணு ,அவ ரொம்ப கை ராசிக்காரி ..உங்களுக்கு தான் தெரியுமே என் கடைல வியாபாரமே ஆகாது..பாதி நேரம் ஈ ஓட்டிகிட்டு தான் இருப்பேன் .இன்னைக்கு காலைல இந்த பொண்ணு தான் முதல் போனி .ஒரே ஒரு பொட்டலம் இட்லி தான் வாங்குச்சு .அதோட கை ராசியல இன்னைக்கு வியாபாரம் ரொம்ப அமோகமா நடந்துச்சு ..அதான் நாளைக்கும் அந்த பொண்ணு இட்லி வாங்க வருமான்னு கேட்டு பார்த்தேன் .."என்று பேசி முடித்தாள் பாட்டி...இந்த பாட்டியின் பேச்சு ராதிகா காதில் விழுந்திருக்குமா?தான் ராசியில்லாதவள் என்ற ராதிகாவின் தேவையற்ற ஏக்கம் தீர்ந்திருக்குமா????



message இல்லாம நித்யா கதை சொல்லுவாளா ??இதோ இருக்கு உங்களுக்கான மெசேஜ் ..
1 .அன்புள்ள பெற்றோருக்கு ,ராசி, தோஷத்தை உங்கள் மனதோடு வைத்துக்கொள்ளுங்கள் .உங்கள் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்காதீர்கள்.மட்டம் தட்டாதீர்கள்.தாழ்வு மனப்பான்மை உங்கள் குழந்தை மனதில் கடுகளவும் வளராத படி பார்த்துக்கொள்ளுங்கள்.திறமையை வளர்க்க உதவி செய்யா விட்டாலும் பரவாஇல்லை "எதற்கும் உனக்கு யோகம் இல்லை யோகம் இல்லை" என்று  இருக்கும் யோகத்தை இல்லாமல் செய்து விடாதீர்கள்...
இத எல்லாம் சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேக்குறீங்களா??சோப்பு கம்பனிக்கு விளக்கேற்றி வச்ச அந்த பொண்ணு நான்தாங்க...:-)